தண்ணீர், உணவு தேடி அலையும் காட்டு யானைகள் : அரசு பேருந்தை வழிமறித்த யானைக்கூட்டம்
வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் நீலகிரி மாவட்டம் மஞ்சூர் - கோவை சாலையில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது
வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் நீலகிரி மாவட்டம் மஞ்சூர் - கோவை சாலையில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. மேலும் அவ்வழியே வாகனங்களில் செல்வோர் பாதுகாப்பாக செல்ல வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் 40 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தை காட்டு யானைகள் கூட்டம் வழிமறித்து நின்றது. இதனால் பேருந்து பயணிகள் பெரும் அச்சத்திற்கு உள்ளாயினர். 20 நிமிடங்கள் வரை சாலையை மறித்து நின்ற யானைகள் அதன் பிறகு மெதுவாக காட்டுக்குள் சென்றன. இதனையடுத்து பேருந்து பயணிகள் நிம்மதியடைந்தனர்.
Next Story