உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 39 லட்சம் பறிமுதல் -போலிசார் அதிரடி நடவடிக்கை

சென்னைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்
உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 39 லட்சம் பறிமுதல் -போலிசார் அதிரடி நடவடிக்கை
x
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து, செங்குன்றம் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து வந்த தனியார் டிராவல்ஸ் பேருந்து ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 39 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.உரிய ஆவணம் இல்லாததால், அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அதை எடுத்து வந்த குண்டூரை சேர்ந்த ஷேக் சலாம் என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.1.29 கோடி பறிமுதல்


தஞ்சையில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லபட்படட் ஒரு கோடியே 29 லட்சம் ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் ஏடிஎம்மில் பணம் நிரப்பக்கூடிய இரண்டு வாகனங்களை மறித்து பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.அதில் ஆவணமின்றி ஒரு கோடியே 29 லட்சம் ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து அந்த வாகனங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பிறகு,பணம்  கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.




Next Story

மேலும் செய்திகள்