மத்திய, மாநில அரசுகள் மீது மக்களுக்கு வெறுப்பு அதிகரிப்பு : 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்
பதிவு : மார்ச் 22, 2019, 01:25 PM
மக்கள் கூட்டம் அதிகரித்து வருவது நாற்பது தொகுதியிலும் நமது கூட்டணி வெற்றி பெறுவதை கூறுவதாக உள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் கோட்டை மைதானத்தில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்தீபனை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.திருவாரூரில் தொடங்கி இன்று மூன்றாவது நாளாக பிரசாரம் செய்து வருவதாக தெரிவித்த ஸ்டாலின், மத்திய, மாநில அரசுகள் மீது மக்களுக்கு வெறுப்பு அதிகரித்து வருவதாக தெரிவித்தார். தி.மு.க. பிரசார கூட்டங்களுக்கு மக்கள் அதிகஅளவில் வருவதாகவும், இந்த கோட்டை மைதானத்தில் கூடியுள்ள கூட்டம், விரைவில்,சென்னை ஜார்ஜ்  கோட்டையில் தி.மு.க. ஆட்சி அமையப் போவதை கட்டியம் கூறுவதாக உள்ளதாக தெரிவித்தார்.மேலும் சேலம் எப்போதுமே தி.மு.க. கோட்டை தான் என்றும் அவர் கூறினார்.நாளுக்கு நாள் தி.மு.க.வை நோக்கி மக்கள் வருவது அதிகரிக்க தொடங்கி உள்ளது, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி வாகை சூட உள்ளதை எடுத்துக் காட்டுவதாக உள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

சாத்தூர் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீனிவாசன், தலைவர்கள் சிலைகள் மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

160 views

பிற செய்திகள்

நகை வாங்குவது போல் நடித்து ஏமாற்றிய மர்மநபர்கள்... தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாயின...

சென்னை வியாசர்பாடியில், நகை வாங்குவது போல் ஏமாற்றிய மர்ம நபர்கள், நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

9 views

கன்னியாகுமரி : 70 ஏடிஎம் கார்டுகளுடன் பணம் எடுக்க முயன்ற மர்ம நபர்

கன்னியாகுமரியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் 70 ஏடிஎம் கார்டுகளுடன், பணம் எடுக்க முயன்ற மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.

26 views

தமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல்

தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

8 views

புதிய கல்வி கொள்கை நகலை எரிக்க முயன்ற மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

கோவையில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை நகலை எரிக்க முயன்ற மாணவர்களுக்கும் போலீசாருக்கிடையே தள்ளூ முள்ளு ஏற்பட்டது.

16 views

பேனர் வழக்கு : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரிய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

12 views

பொள்ளாச்சி : பள்ளி மாணவிகளை செல்போனில் படம்பிடித்து காதலிக்குமாறு மிரட்டல் - 5 இளைஞர்கள் கைது

பள்ளி மாணவிகளை, செல்போனில் படம்பிடித்து காதலிக்குமாறு மிரட்டிய 5 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

79 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.