கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம்

கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம்
x
கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கல்யாண மேடையில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளினர். சிவாச்சாரியார்கள் தெய்வீக திருமண மந்திரங்கள் முழங்கியாக பூஜைகள் நடத்தியதைத்தொடர்ந்து  தங்க மாங்கல்யத்தை அம்பாளுக்கு அணிவித்து பாரம்பரிய வழக்கப்படி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். 

ஊட்டி : மாரியம்மன் கோயில் தேரோட்டம்
ஊட்டியில் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புலி வாகனத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்த விழாவை முன்னிட்டு பாரம்பரிய நடனமான வீரபத்திரன் நடனம், விரதாசி மற்றும் கொல்லி குனிதா நடனம் ஆகியவை நடைபெற்றது. 

கும்பகோணம் : ஆதிகும்பேஸ்வரர் கோயில் சோமவாரப் பிரதோஷ விழா 
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் சோமவாரப் பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கும்பேஸ்வரர்  சன்னதியில் உள்ள நந்திக்கு பால், தயிர், சந்தனம் மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து நந்தி வாகனத்தில் சிவபெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பாரம்பரிய முறைப்படி வெளிப்பிரகாரத்தில் வீதி உலா நடைபெற்றது.

 வாலாஜாபேட்டை : ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம் 
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருகோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோயிலின் பிரமோற்சவ விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சிவபெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 



Next Story

மேலும் செய்திகள்