திருச்சி ரயில்வே பணிமனையில் வேலைவாய்ப்பு - ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் பழகுனர்கள் மனு
பதிவு : மார்ச் 11, 2019, 05:51 PM
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பணிபுரியும் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வடமாநிலத்தவர் என புகார் எழுந்துள்ளது.
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பணிபுரியும் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வடமாநிலத்தவர் என புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் அங்கு நடைபெற்ற தொழில் பழகுனருக்கான தேர்வில் மொத்தமுள்ள ஆயிரத்து 765 பணியிடங்களில் ஆயிரத்து 600 இடங்களுக்கு வடமாநிலத்தவரும்,  165 இடங்களுக்கு மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து உரிய விசாரணை நடத்த கோரியும், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் கூடுதல் முன்னுரிமை வழங்க கோரியும் , தொழில் பழகுனர் பயிற்சி முடித்து வேலை கிடைக்காதவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

பிற செய்திகள்

"திறமையான பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களியுங்கள்" - முதலமைச்சர் பழனிசாமி

திருவள்ளூர் மாவட்டம் தாமரை பாக்கத்தில் ,பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாடு பாதுகாப்பாக இருக்க திறமையான பிரதமரை உருவாக்க, அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

9 views

"திமுக வீட்டு விளக்கு, அதிமுக வீட்டை கொளுத்தும் நெருப்பு" - ஸ்டாலின்

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி , ஆர்.டி.சேகர் ஆகியோருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று ஆதரவு திரட்டினார்.

6 views

"ஜெயலலிதா மரணத்திற்கு திமுக தான் காரணம்" - முதலமைச்சர்

அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

8 views

தண்ணீர் குடிக்க வந்து பள்ளத்தில் சிக்கிய குட்டி யானை : வனத்துறையினர் மீட்டு தாயிடம் ஒப்படைப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த குட்டி யானை பள்ளத்தில் சிக்கியது. அதனை மீட்டு வனத்துறையினர் தாய் யானையிடம் ஒப்படைத்துள்ளனர்.

50 views

100 % வாக்குப்பதிவு - VOTE ON APRIL 18 விழிப்புணர்வு பிரசாரம்

சேலத்தில் பேருந்து ஓட்டுனர்கள் அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்தும் விதமாக VOTE ON APRIL 18 என்ற வடிவில் பேருந்துகளை நிறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

30 views

மேல்மருவத்தூரில் பன்னீர்செல்வம் சாமி தரிசனம் : அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபாடு

திருப்போரூர், செய்யூர் பகுதிகளில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்

101 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.