"தாலுகா அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்த வேண்டும்" - லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
பதிவு : மார்ச் 11, 2019, 05:31 PM
ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்துதல் பிரிவு சிறப்பு தாசில்தார் தர்மராஜ், ஊழல் குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தர்மராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, 2016ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட லஞ்ச வழக்கின் அடிப்படையில், தனது பதவி உயர்வை தடுக்கும் நோக்கில் 2018 அக்டோபரில் பணியிடை நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பணியிடை நீக்கம் என்பது குற்றச்சாட்டுகள் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு ஏதுவாக அலுவல்களில் இருந்து நீக்கி வைப்பது தானே தவிர, தண்டனையல்ல எனவும், இந்த விசாரணையில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

மேலும், நாடு முழுவதும் புற்று நோய் போல பரவியுள்ள ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய நீதிபதி, லஞ்சம் கொடுக்காமல், தாலுகா அலுவலகங்களில் எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை உள்ளதால் தாலுகா அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு துறையினர் அடிக்கடி திடீர் சோதனைகளை நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

அனைத்து அலுவலகங்களிலும் நேர்மையான அதிகாரிகள் இருப்பதாக கூறிய நீதிபதி, அவர்கள், தங்கள் அலுவலகங்களில் நடக்கும் ஊழல் நடவடிக்கைகளை கண்மூடி வேடிக்கை பார்ப்பதை விடுத்து உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அரசு அலுவலகங்களில் சான்றிதழ்கள் வழங்குவதை முறைப்படுத்தி, எத்தனை நாட்களில் சான்றிதழ் கிடைக்கும் என குறிப்பிட்டு, குடிமக்கள் சாசனத்தை வெளியிட வேண்டும் என நீதிபதி அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

5510 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1330 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4549 views

பிற செய்திகள்

45,000 வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரம் - தேர்தல் ஆணையம் சார்பில் அறிக்கை தாக்கல்

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

8 views

சித்தூர் குடிபாலா கிராமத்தில் பல்வேறு அலங்காரங்களுடன் காளை மாட்டுக்கு பூஜை : திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆந்திர மாநிலம் சித்தூர் குடிபாலா கிராமத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காளை பூஜை நடைபெற்றது.

5 views

சண்முகநதியில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகநதியில் சூழ்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரி இந்து தமிழர் கட்சியினர் நூதன முறையில் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

6 views

108 துறவிகள் பங்கேற்ற கலச மகா அபிஷேகம்...

மொரட்டாண்டி பிரத்தியங்கிரா கோயிலில் 108 துறவிகள் பங்கேற்ற கலச மகா அபிஷேகம் மற்றும் குருபூஜை நடைபெற்றது.

7 views

சசிகலா விரைவில் வெளியில் வருவார் என்ற செய்தியில் உண்மை இல்லை - டிடிவி தினகரன்

சசிகலா விரைவில் வெளியில் வருவார் என்ற செய்தியில் உண்மை இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

12 views

வெளி நாடு சென்ற கணவரை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் மனு

வெளிநாடு சென்ற கணவரை மீட்டு தரக்கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தனது மகளுடன் சென்று மனு அளித்துள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.