"யாரையும் குற்றவாளி என ஆணையம் கூறமுடியாது" - ஆணைய விசாரணைக்கு எதிரான வழக்கு 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அனைத்து அம்சங்கள் குறித்தும் விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என தமிழக அரசு வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்துள்ளார்.
யாரையும் குற்றவாளி என ஆணையம் கூறமுடியாது - ஆணைய விசாரணைக்கு எதிரான வழக்கு 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு
x
ஜெயலலிதா மரணத்தில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க அப்பல்லோ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், விசாரணை மேற்கொள்ளும் ஆணையம், அரசுக்கு பரிந்துரை செய்யலாமே தவிர, யாரையும் குற்றவாளிகள் என தீர்மானிக்க முடியாது என அப்பல்லோ தரப்பு வாதிட்டது. விசாரணையை முடிக்கும் முன்பே மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறிய ஆணையம் தரப்பு வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷ், உண்மையை கண்டறியவே ஆணையம் அமைக்கப்பட்டதாகவும், தகவல்களை சேகரித்து அரசிடம் வழங்குவது ஆணையத்தின் பணியல்ல என்றும் வாதாடியது. அப்பல்லோ ஆவணங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக காத்திருப்பதாகவும் தெளிவுபடுத்தினார். அவரது வாதம் முடிவடையாததால், வழக்கு விசாரணை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்