கோகுல்ராஜ் கொலை வழக்கு : நாமக்கல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை

கோகுல்ராஜ் தாய் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு
கோகுல்ராஜ் கொலை வழக்கு : நாமக்கல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை
x
நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில், கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை நடத்த இடைக் கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை முறையாக நடைபெறவில்லை என்று,  கோகுல்ராஜின்  தாய் சித்ரா , உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, யுவராஜின் ஆதரவாளர்களின் மிரட்டலால், அரசுத்  தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி விட்டதாக   மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.. இதையடுத்து, நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு, நீதிபதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க, நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. மற்றும் குற்றம் சாட்டப்பட்ட 17 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்