இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நேரில் ஆஜர் - உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கோவில் சொத்துகளை பாதுகாப்பது தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நேரில் ஆஜர் - உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
x
சென்னையைச் சேர்ந்த  ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில் மதுரை கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும் அச்சொத்துக்கள் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க கோரி அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது மதுரை கள்ளழகர் கோவில் சொத்துகளின் விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அவை 
5 ஆண்டுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கோவிலின் சொத்துகளை பாதுகாக்கப்பது தொடர்பாக ,இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பல சுற்றறிக்கைகளை அனுப்பியும்,  கோவில் நிர்வாக  அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. பழமையான கோவில்களை அதன் தன்மை மாறாமல் பாதுகாக்க முடியவில்லை என கருத்து தெரிவித்த நீதிபதிகள் இந்து சமய அறநிலையத்துறை  ஆணையர் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்