வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2000

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டம் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி,வருகிற பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கப்படுகிறது.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2000
x
கஜா புயல் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைத்தொழிலாளர்கள் 60 லட்சம் பேருக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். இந்த மாத இறுதிக்குள்ளாக அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக அந்த தொகை செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரவுள்ளதால், அதற்கு முன்னதாக சிறப்பு நிதியை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி திட்டம், ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி, பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் தொடங்கி வைக்கிறார். 2 ஆயிரம் ரூபாயை வழங்குவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், மாநகராட்சியில் ஆணையர் தலைமையிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்