திருவண்ணாமலை : 5 ஆயிரம் கடனுக்காக வீடு அபகரிப்பு
பதிவு : பிப்ரவரி 13, 2019, 08:57 AM
திருவண்ணாமலையில் 5 ஆயிரம் ரூபாய் கடனுக்காக மூதாட்டி ஒருவரிடம் இருந்து 1 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை பெண் ஒருவர் அபகரித்துள்ளார்.
திருவண்ணாமலை அஜீஸ் காலணி பகுதியில் வசித்து வரும் காஞ்சனா என்ற மூதாட்டியின் மகன், தங்கப்பன் என்பரிடம் சில வருடங்களுக்கு முன்பு 5 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தங்கப்பன் மற்றும் அவரது உறவினர் விஜயலட்சுமி ஆகியோர் காஞ்சனா வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர் கஞ்சனாவையும் அவருடன் தங்கி இருந்தவர்களையும் இரவோடு இரவாக வெளியேற்றிய அவர்கள், அங்கேயே தங்கியுள்ளனர். மேலும் வீட்டில் இருந்த பொருட்களையும் அவர்கள் வெளியே எடுத்து வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காஞ்சனா,  தன்னுடைய வீட்டை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். 5 ஆயிரம் ரூபாய் கடனுக்காக மூதாட்டியிடம் இருந்து  வீட்டை பெண் ஒருவர் அபகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1640 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5243 views

பிற செய்திகள்

திருவொற்றியூர் அருகே இருவேறு இடத்தில் செயின் பறிப்பு - இளம் கொள்ளையனை கைது செய்த போலீஸ்

திருவொற்றியூர் அருகே இரு வேறு இடங்களில் செயின் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளம் கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர்.

28 views

தம்பியை கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன்

தர்மபுரி அருகே சொத்து தகராறில் அண்ணன் தம்பியை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

429 views

குழந்தைக்கு புட்டி பாலூட்டிய சபாநாயகர்

நியூசிலாந்தின் நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி எம்பி ஒருவரின் குழந்தைக்கு சபாநாயகர் புட்டி பாலூட்டிய சம்பவம் சுவராஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

32 views

கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி குருவாயூரப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள்

கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி இன்று சென்னை மகாலிங்கபுரம் குருவாயூரப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

17 views

தந்தி டி.வி செய்தி எதிரொலியாக மகளிர் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட முடிவு

தந்தி டி.வி செய்தி எதிரொலியாக சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை இடித்துவிட்டு புது கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

12 views

1000 திருக்குறள்களை 30 நிமிடத்தில் ஒப்புவித்து உலக சாதனையை படைத்த 2 மாணவர்கள்

காரைக்குடி முத்து பட்டினத்தில் 1000 திருக்குறள்களை 30 நிமிடத்தில் ஒப்புவித்து சோழன் உலக சாதனையை இரண்டு மாணவர்கள் பெற்றனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.