சின்னதம்பி யானை தொடர்பான வழக்கு : "மீண்டும் வனத்திற்குள் ஏன் அனுப்பக் கூடாது? "- உயர்நீதிமன்றம் கேள்வி

உடுமலை அருகே சுற்றித் திரியும் சின்னதம்பி யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் ஏன் விடக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
x
சின்னதம்பி யானை தொடர்பான பொதுநல வழக்குகள் நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வில் இன்று பிற்பகல் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் அந்த அமர்வு முன் நேரில் ஆஜரானார். சின்னதம்பி யானையை முகாமுக்கு அனுப்புவது தொடர்பாக நாளை விரிவான விளக்கம் அளிக்கப்படும் என்றும் வழக்கு விசாரணையை நாளை தள்ளிவைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அப்போது நீதிபதிகள், சின்னதம்பி யானைக்கு ஏன் இயற்கை உணவுகளை கொடுத்து பழக்கி மீண்டும் காட்டிற்குள் அனுப்பக் கூடாது என கேள்வி எழுப்பினார். சின்ன தம்பி யானையின்  பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்