ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை இல்லை - அப்பல்லோ தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடை கோரி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர், வரம்பு மீறி மருத்துவ கவனக்குறைவு குறித்து விசாரிப்பது, மருத்துவமனையின் நற்பெரை பாதிக்கும் செயல் என கூறினார். ஆனால், இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாததால் விசாரணைக்கு தடை  விதிக்கக் கூடாது என ஆணைய தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். தமிழக அரசு உள்பட 3 தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஆணையத்திற்கு தடை விதிக்க மறுத்ததோடு அப்பலோ நிர்வாகம் மற்றும் அரசு தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்