அழகுடன் ஜொலிக்கும் கிராமத்து ரயில் நிலையம்
பதிவு : பிப்ரவரி 09, 2019, 10:23 AM
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருத்துறையூர் ரெயில் நிலையம் வர்ணம் பூசப்பட்டு அழகுடன் காட்சியளிக்கிறது.
விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே உள்ள  திருத்துறையூர் ரெயில் நிலையத்தை மாதிரி ரெயில் நிலையமாக மாற்ற தெற்கு ரெயில்வே உத்தரவிட்டது. இதையடுத்து அந்த ரயில் நிலையம் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. அழகுடன் ஜொலிக்கும் கிராமத்து ரயில் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. பல வகையான செடிகள், பறவைகள் , வண்ண மீன்கள் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. ரயில் செல்லும் தண்டவாள பாதைகளும் வர்ணங்கள் பூசப்பட்டு பயணிகளை கவரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. திருத்துறையூர் ரயில் நிலையத்தை வரும் 11ந் தேதி தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சாலை விபத்தில் சிக்கிய தி.மு.க. எம்.எல்.ஏ.

மதுரை மாவட்டம் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி சாலை விபத்தில் சிக்கினார்

2 views

மாநிலம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு : அருவிகளில் நீராட படையெடுக்கும் மக்கள்

தமிழகம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள, அகஸ்தியர் மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

8 views

அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் மறைவு : முதலமைச்சர் பழனிசாமி நேரில் அஞ்சலி

சாலை விபத்தில் உயிரிழந்த அ.தி.மு.க. எம்பி ராஜேந்திரன் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

7 views

"பாஜக கூட்டணிக்கு தேமுதிக வரும்" - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

பா.ஜ.க கூட்டணிக்கு தேமுதிக வரும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

8 views

"அரசு வேலை பெற பணம் கொடுப்பவர் மீதும் குற்ற நடவடிக்கை" - பொது அறிவிப்பு வெளியிட டி.ஜி.பி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு வேலை பெறுவதற்கு பணம் கொடுப்பவர்கள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பொது அறிவிப்பு வெளியிட தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

26 views

மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி : 800க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்பு

சிறுவர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.