நடைபாதையில் வியாபாரம் நடக்கிறதா? சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க உத்தரவு

சென்னை என்.எஸ்.சி.போஸ் சாலையில் உள்ள சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்த கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நடைபாதையில் வியாபாரம் நடக்கிறதா? சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க உத்தரவு
x
சென்னை, என்.எஸ்.சி.போஸ் சாலையில் உள்ள சாலையோர வியாபாரிகளை  அப்புறப்படுத்த கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

நீதிமன்ற உத்தரவை,  மாநகராட்சி அமல்படுத்தாததால் மீண்டும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, கடந்த 2013 ம் ஆண்டு டிராபிக் ராமசாமி தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும்,  என்.எஸ்.சி.போஸ் சாலையை சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனரா என்பது குறித்த  கண்காணிப்பு கேமரா காட்சிகளை  சமர்பிக்க வேண்டும் என மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்