கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மனு

"110 ஏக்கரில் பழந்தமிழர் ஆபரணங்கள் புதைந்துள்ளன"
கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மனு
x
கீழடி அகழாய்வு வழக்குகளை சிறப்பு அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கீழடி அகழாய்வில் இரண்டாயிரம்ஆண்டுகள் பழமையான தமிழர் அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், 110 ஏக்கரில் பழங்கால பொருட்கள், ஆவணங்கள் புதைந்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் பரப்பில் மட்டும் ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும்,  கீழடியில் அகழாய்வு பணியை தொடரவும் அதில் கோரப்பட்டுள்ளது. மேலும், கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, வழக்கை சிறப்பு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.

Next Story

மேலும் செய்திகள்