ஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
ஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி
x
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல  விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் குறுக்குசாலையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கனிமொழி, மத்தியிலும் மாநிலத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் அதிமுக வெற்றி பெறாது என்ற அச்சத்தில், அரசு தேர்தலை தள்ளிப்போட்டு வருவதாக கனிமொழி குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்