"விவசாயிகளை பாதிக்கும் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்" - அமைச்சர் தங்கமணி
பதிவு : ஜனவரி 06, 2019, 06:11 PM
விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு தயாராக உள்ளதாக மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு தயாராக உள்ளதாக மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்ட பூமி பூஜையில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது என்றும் அவர் கூறினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.