2 வயது குழந்தையின் நினைவாற்றலுக்கு பதக்கம் வழங்கிய "வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்" நிறுவனம்

விழுப்புரத்தை சேர்ந்த 2 வயது குழந்தையின் நினைவாற்றலை பாராட்டி, "வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்"என்ற நிறுவனம் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கியுள்ளது.
2 வயது குழந்தையின் நினைவாற்றலுக்கு பதக்கம் வழங்கிய வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம்
x
விழுப்புரத்தை சேர்ந்த 2 வயது குழந்தையின் நினைவாற்றலை பாராட்டி, "வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்"என்ற நிறுவனம் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கியுள்ளது.

விழுப்புரத்தை சேர்ந்த பாண்டியன், சிந்தியா தம்பதியினரின் 2 வயது மகன் நிகில்பிரஜன். குழந்தையின் நினைவாற்றல்  திறமையை மேம்படுத்த பெற்றோர் இந்திய வரைபடம், அதில் உள்ள 29 மாநிலங்களின் பெயர், தலைநகரின் பெயர் ஆகியவற்றை விளையாட்டாக சொல்லி கொடுத்தனர். இந்த குழந்தையின் திறமையை தந்தி தொலைக்காட்சி வலைதளம் மூலம் பார்த்த மும்பையை சேர்ந்த "வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்"என்ற நிறுவனம் நிகில்பிரஜனுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டியுள்ளது. இதனையடுத்து, விழுப்புரம்  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், நிகில் பிரஜனுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்