கண்காணிப்பு கேமராவிற்கு பயந்து மாற்று வழியில் லஞ்சம் வாங்கும் போக்குவரத்து போலீசார்

கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதால், சென்னை திருவொற்றியூரில் போக்குவரத்து போலீசார் ஆள் வைத்து லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கண்காணிப்பு கேமராவிற்கு பயந்து மாற்று வழியில் லஞ்சம் வாங்கும் போக்குவரத்து போலீசார்
x
கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதால், சென்னை திருவொற்றியூரில் போக்குவரத்து போலீசார் ஆள் வைத்து லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை துறைமுகத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் வந்து செல்லும் நிலையில், லாரி ஓட்டுனர்களிடம் லஞ்சம் வாங்கி கொண்டு, கண்டெய்னர் லாரிகளுக்கு என ஒதுக்கப்பட்டிருக்கும் பாதைக்கு மாறாக, வேறு வழியில் செல்ல போலீசார் அனுமதிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். லஞ்சம் பெறும் போக்குவரத்து காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்