பொங்கல் - பானைகள் தயாரிப்பு பணி தீவிரம் : மண் கிடைக்காமல் திண்டாடும் மக்கள்

பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், கும்பகோணத்தில், பானைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.
x
கும்பகோணத்தில் மண்பானைகள் தயாரிப்பு பணி பிரதான தொழிலாக நடைபெற்று வருகின்றது. ஆண்டுமுழுவதும், நெருப்பை மூட்டி, மண் பாண்டங்கள் தயாரித்தாலும்,  பொங்கல் பண்டிகை நெருங்கினால் மட்டுமே இவர்களது வியாபாரம், சூடு பிடிக்க தொடங்குகிறது. பண்டிகை காலங்களிலும், மண் கிடைப்பதில் சிக்கல், மழை போன்ற பிரச்சினைகள், இவர்களது தொழிலை மேலும் நலிவுற செய்கிறது. அத்தனை பிரச்சினைகளையும் கடந்து, பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அதிகம் மண் பானைகளை வாங்கி செல்வார்கள் என்ற நம்பிக்கையில், குழம்பு சட்டி, தண்ணீர் பானை, பொங்கல்பானை, அடுப்புகள் என வித விதமாகவும், வேக வேகமாகவும் பொருட்களை தயார் செய்துவருகின்றனர். 
அலுமினியம், சில்வர் பாத்திரங்களை விடுத்து, விழாக்காலங்களிலாவது பாரம்பரியத்தை பின்பற்றும் வகையில், மக்கள் அனைவரும் மண்பானைகளில், சமைக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.   

Next Story

மேலும் செய்திகள்