சென்னையில் 11 மாதங்களில் 515 பேருக்கு டெங்கு காய்ச்சல்...
சென்னையில் 515 பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , அதை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி அறிக்கை அளித்துள்ளது.
* டெங்கு கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு வழக்கறிஞர் சூரியப்பிரகாசம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
* அப்போது, சென்னையில், 515 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
* 8 ஆயிரத்து 266 மருத்துவ முகாம்கள் மூலம் 4 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு சிகிச்சை அளித்துள்ளதாகவும், 6 ஆயிரத்து 288 பேர் டெங்கு சிகிச்சை பெற்றுள்ளதாகவும் மாநகராட்சி கூறியது.
* சென்னையில் நாள் ஒன்றுக்கு 60 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்படுவதாக கூறிய மாநகராட்சி, கொசுக்களின் இனப்பெருக்கத்தை தடுக்க 587 தெளிப்பான் எந்திரங்கள் மூலம் மருந்துகளை தெளிப்பதாக கூறியது..
* டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கத்துக்கு ஏற்ப கழிவுகளை கொட்டிய நிறுவனங்கள், தனிநபர்களுக்கு அபராதம் விதித்துள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்தது.இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை, 4 வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
Next Story