உயர்நீதிமன்ற வாயில்கள் ஒரு நாள் மூடல்

சென்னை உயர்நீதிமன்றத்தில், பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் நடைமுறைப்படி 9 வாயில்களும் இரவு மூடப்பட்டன.
உயர்நீதிமன்ற வாயில்கள் ஒரு நாள் மூடல்
x
150 ஆண்டு பாரம்பரியமிக்க உயர்நீதிமன்றத்திற்கு யாரும் உரிமை கோர முடியாது என்பதை விளக்கும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் 8 ம் தேதி இரவு 8 மணி முதல் மறு நாள், இரவு 8 மணி வரை மூடப்பட்டிருக்கும். இதன்படி, நாளை ஞாயிற்றுக்கிழமை 8 மணி வரை, சென்னை உயர்நீதி மன்றத்தின் 9 வாயில்களும் மூடப்பட்டிருக்கும். கன்னிகாபரமேஸ்வரி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் உயர்நீதிமன்றம் இயங்குவதால், ஒரு நாள் முழுவதும் பூட்டி, சாவிகள் அனைத்தும் இந்த கோவிலில் வைக்கப்படுவது வழக்கம். 

Next Story

மேலும் செய்திகள்