ஜெயலலிதா-வின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் - அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் மும்முரம்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் அஞ்சலி செலுத்த உள்ளனர். ஏராளமான மக்கள் கூடுவார்கள் என்பதால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஜெயலலிதா நினைவிட பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வாலாஜா சாலையில் இருந்து, ஜெயலலிதா நினைவிடம் வரை அமைதி பேரணி நடப்பதால், சாலை முழுவதிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நினைவிட பகுதியில், கட்டுமான பணிகள் நடந்து வருவதால், பள்ளங்களில் யாரும் விழுந்துவிடாமல் இருக்க, தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.
Next Story