அரசு மருத்துவர் வேலைநிறுத்தம் மனு : அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
பதிவு : டிசம்பர் 04, 2018, 01:03 PM
அரசு மருத்துவர் வேலைநிறுத்தம் தொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் 18 ஆயிரத்து 600 அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு தடை விதிக்க கோரி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயண், ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு முன்பு, வாராகி என்பவர் தரப்பில் முறையிடப்பட்டது. அத்தியாவசிய சேவையாக மருத்துவச் சேவை இருப்பதால், தடை விதிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் 'எஸ்மா', 'டெஸ்மா' சட்டத்தின் கீழ் அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக தெரிவித்த நீதிபதிகள், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தனர். இது தொடர்பாக மனு தாக்கல் செய்தால், விசாரணைக்கு எடுத்து கொள்வதாகவும் கூறினர். 

தொடர்புடைய செய்திகள்

20 ஆம் தேதிக்கு பிறகு அரசு மருத்துவர்கள் தொடர் வேலை நிறுத்த எச்சரிக்கை

அரசு மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்தாவிட்டால், வரும் 20 ஆம் தேதிக்கு பிறகு தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

74 views

பிற செய்திகள்

வானில் டைவ் அடிக்கும் 102 வயது மூதாட்டி

102 வயது மூதாட்டி ஒருவர் 14 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து வானில் சாகசம் நிகழ்த்தி உலக சாதனை படைத்திருக்கிறார்.

38 views

ரணிலுக்கு ஆதரவு : நம்பிக்கை தீர்மானம் வெற்றி

இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கேவிற்கு பெரும்பான்மை உள்ளது என்ற நம்பிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

112 views

ரெயிலில் பாய்ந்து கர்ப்பிணி பெண் தற்கொலை

கர்ப்பிணி பெண் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து தனது ஒருவயது மகனுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

404 views

ஜெயலலிதா பெயரில் கட்சியை பதிவு செய்ய மறுப்பு

ஜெயலலிதா கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை பதிவு செய்ய மறுத்தது குறித்து விளக்கம் அளிக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

28 views

ஐ.பி.எல். 12 வது சீசன் வீரர்கள் விலை நிர்ணயம்

ஐ.பி.எல். 12 வது சீசனுக்கான ஏலத்தில் 346 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

35 views

திமுகவில் இணைய செந்தில் பாலாஜி திட்டம்

டி.டி.வி. தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்எல்ஏக்களில் ஒருவரான செந்தில் பாலாஜி, விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

435 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.