கஜா புயல் நிவாரண அதிகாரிகள் நியமனம்

கஜா புயல் நிவாரண பணிகளுக்காக சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.
கஜா புயல் நிவாரண அதிகாரிகள் நியமனம்
x
கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மறுசீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான திட்ட அதிகாரிகளை நியமிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நிவாரணப் பணிகள் திட்ட இயக்குநராக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் ஜெகன்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல, கூடுதல் திட்ட இயக்குநராக தஞ்சை மாவட்ட சார் ஆட்சியர் பிரதீப் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த பணிகள் உருவாக்கப்பட்டிருப்பது தொடர்பான மற்ற நடைமுறைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மேற்கொள்ளும் என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். இதனிடையே, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 48 கோடியே 65 லட்சத்து 77 ஆயிரத்து 345 ரூபாய் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்