புயல் நிவாரணம் தமிழகத்துக்கு மேலும் ரூ353.70 கோடி

கஜா புயல் பாதிப்பிற்கு, தமிழகத்துக்கு மேலும் 353 கோடியே 70 லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரண நிதியை, மத்திய அரசு அறிவித்துள்ளது.
புயல் நிவாரணம் தமிழகத்துக்கு மேலும் ரூ353.70 கோடி
x
முதல் கட்டமாக மின் இணைப்புகளை சரி செய்யும் பணிக்கு மத்திய அரசு 200 கோடி ரூபாய் வழங்கியதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்திருந்தார். தற்போது, மாநில பேரிடர் நிதிக்கு 2-வது தவணையாக 353 கோடியே 70 லட்ச ரூபாயை ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். மத்திய ஆய்வு குழுவின் இறுதி அறிக்கையின் அடிப்படையில் தேசிய பேரிடர் நிதியிலிருந்து, தமிழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில், தேசிய பேரிடர் மீட்பு படை, விமானப்படை, கடற்படை, கடலோர காவல் படை மூலம் தமிழக அரசுக்கு, மத்திய அரசு உதவியதாகவும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கஜா புயல் பாதிப்பிற்கு மத்திய அரசு இதுவரை 553 கோடியே 70 லட்ச ரூபாய் ஒதுக்கி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்