"தூய்மை இந்தியா திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது" - ஆட்சியர் வீரராகவ ராவ்

துய்மை இந்தியா திட்டம் மூலமாக 429 ஊராட்சிகளில் நூறு சதவீதம் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்டம் என அறிவிக்க உள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
தூய்மை இந்தியா திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது - ஆட்சியர் வீரராகவ ராவ்
x
மத்திய பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின், ஊரக உதவியாளர்களுக்கான  கருத்தரங்கம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய ஆட்சியர் வீரராகவ ராவ் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், தூய்மை இந்தியா திட்டம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளிலும்  சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், நூறு சதவீதம் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற மாவட்டமாக ராமநாதபுரம் இருப்பதாக தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்