கின்னஸ் சாதனை : ஒரே மேடையில் 1418 பேர் 'ஒயிலாட்டம்' நடனம்
சென்னை திருநின்றவூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சினிமா பின்னணி பாடகர் வேல்முருகன் தலைமையில் ஒயிலாட்டம் என்ற நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை திருநின்றவூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சினிமா பின்னணி பாடகர் வேல்முருகன் தலைமையில் ஒயிலாட்டம் என்ற நடன நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்வளர்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். இதில் மலேசியா உள்ளிட்ட பிற நாடுகளை சேர்ந்தவர்கள் உட்பட 1418 கலைஞர்கள் பங்கேற்று ஒரே மேடையில் நடனமாடி அசத்தினர்.இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனையாகவும், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது.இயக்குனர் கங்கை அமரன், நடிகர் தம்பி ராமையா, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் பங்கேற்றனர்.
Next Story