தேனி : கஜா புயலின் போது பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு

கஜா புயலின் போது பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் தென்னை, வாழை மரங்கள் அடித்து செல்லப்பட்டதால் தேனி மாவட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தேனி : கஜா புயலின் போது பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு
x
தேனி மாவட்டம் போடி  அருகே கொட்டகுடி ஆற்றின் கரையோரம் உள்ள மல்லாரி  பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில்  வாழை, தென்னை மரங்கள்
பயிரிடப்பட்டிருந்தன. வாழை மரங்கள் நன்கு வளர்ந்து பழத்தார்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன. இந்நிலையில் கஜா புயலின் போது 
பெய்த கன மழையால் கொட்டகுடி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 500க்கும் மேற்பட்ட தென்னை, வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து சேதமடைந்தன.  பல மரங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.  இதனால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள 
விவசாயிகள் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்