ஆணவப்படுகொலைளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும்" - பாலகிருஷ்ணன், பா.ரஞ்சித், கௌசல்யா கோரிக்கை
ஆணவப்படுகொலைளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என பாலகிருஷ்ணன், பா.ரஞ்சித், கௌசல்யா ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஒசூர் அருகே காதல் தம்பதியர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில்,
ஆணவக் கொலைகளை தடுக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறிய தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஓசூர் அருகே உள்ள சூட கொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நந்திஸ் - சுவாதி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சுவாதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருவரையும் கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி சென்று படுகொலை செய்துள்ளனர். இந்த நிலையில் நந்தீஸ் வீட்டுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இயக்குநர் பா.ரஞ்சித், ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட கௌசல்யா ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள்,
தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவதாகவும், இதை தடுக்க, தனியாக சட்டம் இயற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
Next Story