"மசாஜ் என்பது அறிவியல் சார்ந்த கலை" - சென்னை உயர் நீதிமன்றம்

மசாஜ் என்பது அறிவியல் சார்ந்த கலை என்றும், மசாஜ் சென்டர்கள் பற்றிய தவறான எண்ணங்கள் மாற வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மசாஜ் என்பது அறிவியல் சார்ந்த கலை - சென்னை உயர் நீதிமன்றம்
x
* சென்னை நீலாங்கரையை சேர்ந்த மசாஜ் சென்டர் உரிமையாளர் மீது விபச்சார தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு  தொடர்ந்த போலீசார், அங்கு வேலை பார்த்த இந்தோனேசியாவை சேர்ந்த பெண் பாதிக்கப்பட்ட நபராக குறிப்பிட்டு அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். 

* இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பெண்,10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க போலீசாருக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  

* இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மசாஜ் என்பது அறிவியல் சார்ந்த ஒரு கலை என்றும், மசாஜ் சென்டர் என்றாலே விபசாரம் நடக்கும் இடம் என தவறாக கருதுவதாகவும் குறிப்பிட்டார். 

* இதுபோன்ற இடங்களில் தவறு நடக்கவில்லை எனக் கூற முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதி, மசாஜ் என்பதை அறிவியல் பூர்வமான தொழிலாக பலர் கையாளும் நிலையில், இந்த தொழிலை பற்றிய  தவறான எண்ணங்கள் மாற வேண்டும் எனவும்  கருத்து தெரிவித்தார். 

* இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். 


Next Story

மேலும் செய்திகள்