வைகை அணையிலிருந்து வினாடிக்கு 4660 கன அடி நீர் வெளியேற்றம்
பதிவு : நவம்பர் 14, 2018, 02:31 PM
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவில் நீடித்தது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின்  நீர்வரத்து அதிகமாக இருந்ததால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவில் நீடித்தது. இதனால் வைகை அணையில் இருந்து ஏற்கனவே 1660 கன அடி வீதம் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது கூடுதலாக 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மொத்தமாக வினாடிக்கு 4660 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணையின் முன்புறம் உள்ள இரண்டு கரைகளை இணைக்கும் பூங்கா பாலம் நீரில் மூழ்கியது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.