டாஸ்மாக் தீபாவளி வசூல் : ரூ. 600 கோடி : இலக்கை மிஞ்சியது, டாஸ்மாக் மது விற்பனை

தீபாவளியையொட்டி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் மது விற்பனை, 4 நாட்களில், 602 கோடி ரூபாயாக உயர்ந்தது.
டாஸ்மாக் தீபாவளி வசூல் : ரூ. 600 கோடி : இலக்கை மிஞ்சியது, டாஸ்மாக் மது விற்பனை
x
தீபாவளியையொட்டி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் மது விற்பனை, 4 நாட்களில், 602 கோடி ரூபாயாக உயர்ந்தது. கடந்த சனிக்கிழமை 124 கோடி ரூபாய்க்கும்,  ஞாயிற்றுக்கிழமை 150 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனை ஆயின.  தீபாவளி நாளில் மட்டும் 180 கோடி ரூபாய்க்கு, மது விற்பனை நடந்ததாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தாண்டு தீபாவளிக்கு, 320 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், மதுப்பிரியர்களின் உற்சாகத்தால், இப்போது, இலக்கை மிஞ்சி, தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை ஆகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்