நிதி நிறுவனத்தின் ரூ.1137 கோடி மோசடி வழக்கு - நிதி நிறுவன முன்னாள் அதிகாரிகள் முன் ஜாமீன் ரத்து

ஆயிரத்து 137 கோடி மோசடி வழக்கில் நிதி நிறுவன முன்னாள் நிர்வாகிகளுக்கு முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.
நிதி நிறுவனத்தின் ரூ.1137 கோடி மோசடி வழக்கு - நிதி நிறுவன முன்னாள் அதிகாரிகள் முன் ஜாமீன் ரத்து
x
நிலம் வாங்கித் தருவதாக கூறி, 12 லட்சம் பேரிடம் ஆயிரத்து 137 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, 'டிஸ்க் அசர்ட்' என்ற நிதி நிறுவன நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த நிறுவனத்தின் சொத்துகளை விற்று பிரித்துக் கொடுக்க குழு அமைக்கப்பட்டது. இது குறித்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நிதி நிறுவன நிர்வாகிகள், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக குழு அறிக்கை அளித்தது. இதையடுத்து, முன்னாள் நிர்வாகிகளை ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஜனார்த்தனன், உமாசங்கர், அருண் ஆகிய மூவரின் முன் ஜாமீனை நீதிபதிகள் ரத்து செய்தனர். மேலும் வரும் 8ம் தேதி மதுரை சிறப்பு நீதிமனறத்தில் ஆஜராகி பாஸ்போர்ட்டுகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர்களை காவல்துறை கைது செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்