பேன்சி ரக பட்டாசு வகைகளில் இந்த ஆண்டு புதுவரவு என்ன?

தீபாவளி பண்டிகைக்கு இந்த ஆண்டு புதுவரவாக வந்துள்ள பேன்சி ரக பட்டாசுகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்
பேன்சி ரக பட்டாசு வகைகளில் இந்த ஆண்டு புதுவரவு என்ன?
x
தீபாவளி பண்டிகையின் சிறப்புகளில் பிரதான இடம் பிடித்திருப்பது பட்டாசுகள் தான். வானில் வர்ண ஜாலம் காட்டும் பட்டாசுகளை பார்த்தால் பெரியவர்கள் மனது குழந்தையாக மாறி குதூகலிக்கும். 
விதவிதமான பட்டாசு ரகங்கள் கடைகளுக்கு வந்தாலும் புதுவரவு என்ன என்ற கேள்விக்கு பிறகு தான் இளைஞர்கள் பட்டாசு பர்ச்சேஸை ஆரம்பிப்பார்கள். இவர்களுக்காகவே இந்த ஆண்டு கண்கவர் வண்ணங்களை அள்ளித் தெளிக்கும் வகையில் புதுவரவு பட்டாசுகள் வந்திருக்கிறது. சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஏராளமான புதுவரவுகள் இந்த ஆண்டு சந்தைக்கு வந்திருக்கிறது... அந்த வரிசையில் பிரதான இடம் பிடித்திருக்கிறது நயாகரா மற்றும் ரொமான்ஸ் என்ற 2 பட்டாசு ரகங்கள்.. வானில் பல அடி தூரம் சென்று வர்ணஜாலம் காட்டும் இந்த பேன்சி ரக பட்டாசுகள் அதிகம் விற்பனையாகும் பட்டியலில் இருக்கிறதாம்...பண்டிகையை மேலும் அழகாக்கும் வகையிலான இந்த பட்டாசுகளை வெடிப்பது ஒருபக்கம் இருந்தாலும், பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.





Next Story

மேலும் செய்திகள்