இயக்குனர் சுசி கணேசன் மீது பாலியல் புகார் கவிஞர் லீனா மணிமேகலை #Metoo மூலம் புகார்

திருட்டுப்பயலே, கந்தசாமி உள்ளிட்ட படங்களை இயக்கிய சுசி கணேசன் தன்னை பாலியல் ரீதியாக சீண்டியதாக, கவிஞர் லீனா மணிமேகலை, me too HASH TAG மூலம் புகார் தெரிவித்துள்ளார்
இயக்குனர் சுசி கணேசன் மீது பாலியல் புகார் கவிஞர் லீனா மணிமேகலை #Metoo மூலம் புகார்
x
* இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள லீனா மணிமேகலை, கடந்த 2005-ஆம் ஆண்டில், இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் அத்து மீறியதாக குறிப்பிட்டுள்ளார். 

* தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தாம், தயாரிப்பாளராக இருந்த போது, சுசி கணேசனை பேட்டி எடுத்ததாகவும், பேட்டி முடிந்தவுடன், தன்னை வீட்டில் விடுவதாகக் கூறி, சுசி கணேசன் அவரது காரில் அழைத்துச் சென்றதாகவும், லீனா மணிமேகலை குறிப்பிட்டுள்ளார்.



* அப்போது, திடீரென தனது செல்போனை பிடுங்கிய சுசி கணேசன், அதனை 
SWITCH-OFF செய்து, காரின் ஒரு மூலையில் தூக்கி எரிந்து, தன்னை அவரது அபார்ட்மென்ட்டுக்கு வரும்படி மிரட்டியதாகவும் லீனா தெரிவித்துள்ளார்.

* காரில் இருந்து தன்னை இறக்கி விடும்படி, சுசிகணேசனிடம்  கெஞ்சியதாகவும், ஆனால் அவர் காரை நிறுத்தாததால், பையில் வைத்திருந்த குறுங்கத்தியை எடுத்துக் காட்டி மிரட்டியதாகவும் லீனா குறிப்பிட்டுள்ளார்.

* 45 நிமிடங்களாக, கார் சுற்றிக் கொண்டிருந்ததாகவும், ஒரு வழியாக சுசி கணேசன் தன்னை இறக்கி விட்டதாகவும் லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார். 

* அப்போது, தனக்கு தைரியம் இல்லாததால், இந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லவில்லை என்றும் லீனா மணிமேகலை குறிப்பிட்டுள்ளார்.



தனது கற்பை, கவிஞர் லீனா மணிமேகலை சூறையாடி விட்டதாக, இயக்குனர் சுசி கணேசன் பதில் அளித்துள்ளார்.

* இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், லீனாவின் அறுவறுப்பான பொய் தன்னை நிலைகுலைய வைத்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.




* தன் மீதான பொறாமையின் வெளிப்பாடாக, லீனா, ஒரு கற்பனைக் கதையை லீனா உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள சுசி கணேசன், முதல் சந்திப்பிலேயே காரில் ஏறிக் கொள்ளும் புதுமைப் பெண்ணான நீங்கள், கத்தியால் குத்தியிருந்தால், நேர்மையானவர் என நினைத்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். 

* லீனாவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்பதை நிரூபிக்க தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ள சுசி கணேசன், அவர் மன்னிப்பு கோரவில்லை என்றால் மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்போவதாகவும் எச்சரித்துள்ளார்.

* கற்பு என்பது இரு பாலருக்கும் பொதுவானது என்றும், தனது கற்பை லீனா சூரையாடியிருக்கிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ள சுசி கணேசன்,  

* metoo-இயக்கத்தை திசைதிருப்பும் இதுபோன்றவர்களை, சமூக வலைதளவாசிகள் அடையாளம் கண்டு தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்