"மொட்டப்பாறை பகுதியில் தடுப்பணை கட்டிய ஒப்பந்ததாரர் யார்?" - உயர்நீதிமன்றம்

வைகை நதியில் மொட்டப்பாறை பகுதியில் தடுப்பணை கட்டிய ஒப்பந்ததாரர் யார், தடுப்பணை கட்ட எவ்வளவு செலவிடப்பட்டது என்பது குறித்த முழு விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மொட்டப்பாறை பகுதியில் தடுப்பணை கட்டிய ஒப்பந்ததாரர் யார்? - உயர்நீதிமன்றம்
x

* மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த சுரேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தாக்கல் செய்த மனுவில், வைகை நதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் முறையாக பராமரிக்கப்படாததால் சிதிலம் அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

* வைகை நதியில் மொட்டப்பாறையில் 7 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தடுப்பணை பராமரிப்பு இல்லாமல் சேதம் அடைந்துள்ளதால் தண்ணீரை சேமிக்க முடியவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டது

* வைகை நதியில் அமைக்கப்பட்டுள்ள மொட்டப்பாறை உட்பட அனைத்து தடுப்பணைகளையும் சீரமைக்கவும், புதிய தடுப்பணைகளை கட்டவும் அரசுக்கு உத்தரவிடவேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டது.

* இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, மொட்டப்பாறை பகுதியில் தடுப்பணை கட்டிய ஒப்பந்ததாரர் யார், தடுப்பணை கட்ட எவ்வளவு செலவிடப்பட்டது ஆகிய,

* விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்