ஹெச்.ராஜாவுக்கு எதிராக இந்து அறநிலையத் துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு எதிராக இந்து அறநிலையத் துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
ஹெச்.ராஜாவுக்கு எதிராக இந்து அறநிலையத் துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
x
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு எதிராக இந்து அறநிலையத் துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் இந்த போராட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அறநிலை துறை அலுவலர்கள், ஊழியர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். ராஜாவை கைது செய்ய வேண்டும், பல்வேறு குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மையை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். 

ஹெச்.ராஜாவுடன் இருந்தவர்கள் முன் ஜாமின் மனு ஒத்திவைப்பு : 




நீதித் துறையையும், காவல் துறையும் இழிவாக பேசியதாக, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தபோது, ஹெச்.ராஜாவுடன் இருந்த ஐந்து பேர், தங்களுக்கு முன் ஜாமின் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஹெச்.ராஜா மீதான வழக்கு, அக்டோபர் 4-ஆம் தேதி விசாரணைக்கு வர இருப்பதால், முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 24 -ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக உத்தரவிட்டார்.



Next Story

மேலும் செய்திகள்