சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுப்பு - அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சிலைகடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுப்பு - அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
x
சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்து கடிதம் அனுப்பியுள்ளது குறித்து அரசுக்கு நீதிபதிகள் கேள்வி ஏழுப்பினர். இதற்கு பதில் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர் மத்திய அரசு வழக்கு விவரங்களை கேட்டுள்ளதாகவும்,  அதன் அடிப்படையில் இந்த வழக்குகளை சிபிஐ விசாரிக்க முடியுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என கடிதம் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார். 

ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால், விசாரணைக்கு ஒத்துழைப்பு மட்டுமே அளிக்க முடியும் என சிபிஐ தெரிவித்துள்ள நிலையில் சிபிஐக்கு மாற்றி அரசாணை பிறப்பிக்கும் முன் உரிய நடைமுறைகளை ஏன் பின்பற்றவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர் சிபிஐ அனுப்பிய கடிதம் குறித்து தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என பதில் அளித்தார். இதையடுத்து சிபிஐயின் கடிதம் குறித்து ஒரு வாரத்திற்குள் உரிய பதிலை அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்