பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
x
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் இன்று சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அலமேலு மங்கை தாயாருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்த நிகழ்வில் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து  கொண்டனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள திருவேங்கட நாதபுரம் வெங்கடாசலபதி கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

இதேபோல் பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி, திருக்குறுங்குடி நம்பி கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சென்னை திருவொற்றியூரை அடுத்த காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திரண்டனர். சுவாமிக்கு அத்திப்பழம் மற்றும் சோளத்தை  கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 

இதேபோல் திருநாகேஸ்வரம் பகுதியில் உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் அதிகாலை விஷ்வரூப தரிசனம் நடைபெற்றது. மேலும் பெருமாளுக்கு 108 விதமான மலர்களை கொண்டு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்