மணல் திருட்டால், ரூ.80 கோடியில் கட்டப்பட்ட பாலத்திற்கு பேராபத்து

கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டு காரணமாக 80 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய பாலம் தனது ஸ்திரத்தன்மையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மணல் திருட்டால், ரூ.80 கோடியில் கட்டப்பட்ட பாலத்திற்கு பேராபத்து
x
 * திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே, கொள்ளிடம் ஆற்றில், 80 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டப்பட்டது. முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, இந்த பாலத்தை திறந்து வைத்தார். இந்த பாலத்திற்கு அருகே, சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில், மணல் குவாரி அமைத்தது மட்டுமின்றி, மணல் திருட்டும் நடைபெற்று வருகிறது. இதனால், புதிய பாலத்தின் கீழ், 10 அடிக்கு மேல் மணல் அரிப்பு ஏற்பட்டு, ஸ்திரத்தன்மை இழக்கும் நிலையில் தூண்கள் உள்ளன. 

* மணல் திருட்டால், அருகில் உள்ள பழைய பாலத்தில், 2 தூண்கள் இடிந்து விழுந்தன. அதனை பழைய பாலம் என்று கூறி, அதிகாரிகள் முக்கியத்துவம் தரவில்லை. முக்கொம்பில், மதகு பாலங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், பேராபத்து வரும் முன்னரே, புதிய பாலத்தை சீரமைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்