விசாரணைக்கு அழைத்து சென்றவரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய ஆய்வாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்..!

திருப்பூர் மாவட்டம் வலையபாளையத்தைச் சேர்ந்த பொறியாளர் அருணை விசாரணைக்கு அழைத்து சென்று அரை நிர்வாணமாக்கி தாக்கிய அவினாசிபாளையம் ஆய்வாளருக்கு மனித உரிமை ஆணையம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
விசாரணைக்கு அழைத்து சென்றவரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய ஆய்வாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்..!
x
பொறியாளர் அருணை, 2011 ஆம் ஆண்டு அவினாசிபாளையம் போலீசார் ஒரு வழக்கு விசாரணைக்காக  காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் அருணின் கைகளை இரும்பு சங்கிலியால் கட்டி, அரை நிர்வாணமாக்கி தாக்கியதாக மாநில மனித உரிமை ஆணையத்தில் பாதிக்கப்பட்ட அருண் புகார் அளித்துள்ளார். 

அதை விசாரித்த மனித உரிமை  ஆணைய உறுப்பினர் டி.ஜெயச்சந்திரன், ஆய்வாளர் தன்னாசி பாண்டியனுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த தொகையை நான்கு வாரத்துக்குள் பாதிக்கப்பட்ட அருணுக்கு வழங்கி விட்டு, ஆய்வாள​ரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம் என்றும் அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்