தமிழக மருத்துவமனைகளில் தீ பாதுகாப்பு விதிமீறல்கள்

தமிழகத்தில் 200 மருத்துவமனைகளில், தீ பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக தமிழக அரசு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தமிழக மருத்துவமனைகளில் தீ பாதுகாப்பு விதிமீறல்கள்
x
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி,  மருத்துவமனைகளில் தீ விபத்தை தடுக்க எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து, ஆய்வு நடத்தப்பட்டது. 

* சென்னையில் 100 மருத்துவமனைகளிலும், பிற மாவட்டங்களில் 100 மருத்துவமனைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

* சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மின்சாரவாரியம் உள்ளி​ட்டவற்றின் உதவியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 

* அப்போது, சுமார் 90 சதவீத மருத்துவமனைகள், தீ பாதுகாப்பு விதிகளை மீறியதாக கூறப்படுகிறது. அதன் படி, சென்னையில் சில மருத்துவமனைகளில், தீ விபத்து பாதுகாப்பு கருவிகள் பழுதடைந்திருப்பது, தெரிய வந்துள்ளது. 

* பெரும்பாலான மருத்துவமனைகள் தீ பாதுகாப்பு சான்றிதழ் பெறவில்லை என்றும், அவசர கால மீட்புத் திட்டம், தீ விபத்து நடந்தால் நீர் தெளிப்பான் உள்ளிட்ட இதர பாதுகாப்பு கருவிகளை நிர்மாணம் செய்ய மருத்துவமனைகள் கால அவகாசம் கோரியிருப்பதாகவும் தெரிகிறது.

* உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மூன்று மாதத்திற்குள் அனைத்து மருத்துவமனைகளும் நிறுவ வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்