வாழ்வா? சாவா? போட்டியில் வங்கதேசம் | BAN vs PAK

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் - வங்கதேச அணிகள் மோதவுள்ளன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கவுள்ளது. பாகிஸ்தான் 4 போட்டிகளிலும், வங்கதேசம் 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் வங்கதேசம் தோல்வி அடைந்தால் முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்