மகளிர் கிரிக்கெட் லீக் : இந்தியா - ஆஸி. பலப்பரீட்சை - நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் இந்தியா
மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆக்லாந்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மெக்லானிங், பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடர்ந்து களமிறங்கிய இந்திய தொடக்க வீராங்கனைகள் மந்தனாவும், சஃபாலி வர்மாவும் சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். எனினும், கேப்டன் மிதாலிராஜ்-யஷ்திகா ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் அரைசதம் அடித்த நிலையில், யஷ்திகா 59 ரன்களில் ஆட்டமிழந்தார். 35 ஓவர்கள் முடிவில் இந்தியா 170 ரன்களைக் கடந்து ஆடிவருகிறது.
Next Story