ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதிக்குள் நுழைந்தார் சிட்ஸிபாஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு கிரீஸை சேர்ந்த முன்னணி வீரர் சிட்ஸிபாஸ் தகுதி பெற்றுள்ளார்.
ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதிக்குள் நுழைந்தார் சிட்ஸிபாஸ்
x
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு கிரீஸை சேர்ந்த முன்னணி வீரர் சிட்ஸிபாஸ் தகுதி பெற்றுள்ளார். மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 4ம் சுற்று ஆட்டத்தில், அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்ஸ் உடன் சிட்ஸிபாஸ் மோதினார். இருவரும் மாறி மாறி செட்களை கைப்பற்றி வெற்றிக்காக கடுமையாக போராடிய நிலையில், 5வது செட் வரை ஆட்டம் சென்றது. பரபரப்பாக நடைபெற்ற 5வது செட்டை 6-க்கு 4 என்ற கணக்கில் கைப்பற்றி, காலிறுதிக்கு சிட்ஸிபாஸ் முன்னேறினார். நாளை நடைபெறவிருக்கும் காலிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் சின்னருடன், சிட்ஸிபாஸ் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்