ஐபிஎல் மெகா ஏலம் உள்ளே...! வெளியே...! - வீரர்கள் விவரம்

ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
x
ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. 

ஐபிஎல் 2022ஆம் தொடருக்கான மெகா ஏலத்தில் வீரர்கள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 20ம் தேதியுடன் நிறைவு பெற்றது.

ஏற்கனவே உள்ள 8 அணிகள் வீரர்கள் தக்கவைப்பு நடைமுறையை முடித்துவிட்ட அணியில், புதிய அணிகளான அகமதாபாத் ஹர்திக் பாண்டியா, கில், ரஷீத் கானையும்,

லக்னோ அணி ராகுல், ஸ்டொயினிஸ், ரவி பிஷ்னாய் ஆகியோரை டிராப்ட் முறையில் தேர்வு செய்ததாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன.

மொத்தம் 33 வீரர்கள் தக்கவைக்கப்பட்ட நிலையில், இவர்களை தவிர 1214 வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதில் சர்வதேச அனுபவம் வாய்ந்த 61 வீரர்கள் உட்பட இந்திய வீரர்கள் 896 வீரர்களும்

318 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர்

இந்திய வீரர்களில் தவான், அஸ்வின், சஹால், ஷ்ரேயஸ் ஐயர், தீபக் சஹார், தாக்கூர், ரெய்னா உள்ளிட்டோரும்,

வெளிநாட்டு வீரர்களில் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், டூபிளசிஸ், ரபாடா, பிராவோ, கம்மின்ஸ், டி காக் உள்ளிட்டோரும் அடிப்படை விலையாக 2 கோடிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

சர்வதேச அளவில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவில் இருந்து 59 வீரர்களும், தென் ஆப்பிரிக்காவில் இருந்து 48 வீரர்களும், மேற்கிந்திய தீவுகளில் இருந்து 41 வீரர்களும் ஏலத்தில் இடம்பெறுகின்றனர்

இதில் குறிப்பிடப்படும் விஷயமாக ஐபிஎல் ஜாம்பவனாக போற்றப்படும் கிறிஸ் கெய்ல் விண்ணப்பிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது

இவரோடு, சாம் கரண், ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்டார்க் ஆகியோரும் மெகா ஏலத்தில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூருவில் பிப்ரவரி 12 மற்றும் 13ம் தேதி ஏலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்