IND vs SA || தென் ஆப்பிரிக்காவில் தொடரை வெல்லுமா இந்தியா?

இந்தியா - தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்க உள்ள நிலையில், தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக இந்தியா தொடரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
x
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியாவும், ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்ற 2வது டெஸ்டில், தென் ஆப்பிரிக்காவும் வென்றன. இதனால், 1-க்கு 1 என்ற கணக்கில் தொடர் சமனிலையில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது போட்டி, கேப்டவுனில் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத கேப்டன் கோலி, இந்தப் போட்டியில் களமிறங்க உள்ளார். தென் ஆப்பிரிக்காவில் இதுவரை இந்தியா டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இதனால், இந்தப் போட்டியில் வெற்றி பெற்று, இந்திய அணி வரலாறு படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்