டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டி - தங்கப் பதக்கத்தை பகிர்ந்த கத்தார், இத்தாலி வீரர்கள்

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டிக்கான தங்கப் பதக்கத்தை கத்தார் மற்றும் இத்தாலி வீரர்கள் பகிர்ந்து கொண்டு உள்ளனர்.
x
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டிக்கான தங்கப் பதக்கத்தை கத்தார் மற்றும் இத்தாலி வீரர்கள் பகிர்ந்து கொண்டு உள்ளனர். உயரம் தாண்டுதல் போட்டியில் கத்தார் வீரர் எஸ்ஸா பர்ஷிமும், இத்தாலி வீரர் டம்பேரியும் 2 புள்ளி 37 மீட்டர் உயரத்தை தாண்டினர். இருவரும் சம உயரத்தை தாண்டியதால் வெற்றியாளரை தீர்மானிக்க ஜம்ப்-ஆஃப் முறையை நடுவர்கள் கொண்டு வந்தனர். இருப்பினும், ஜம்ப்-ஆஃப் முறையில் கலந்து கொள்ள விரும்பாத கத்தார் மற்றும் இத்தாலி வீரர்கள் தங்களுக்குள் பேசி, ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக தங்கப் பதக்கத்தை பகிர்ந்து கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்